நுவான் சொய்ஸா மீதான குற்றச்சாட்டுக்கள் நிரூபணம்!

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும் பயிற்சியாளருமான நுவன் சொய்ஷா மீது, சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலினால் (ICC) முன்வைக்கப்பட்ட 3 குற்றச்சாட்டுகள் நிரூபணமாகியுள்ளது.

ICC யின் சுயாதீன ஊழல் தடுப்பு தீர்ப்பாயத்தினால் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில், ஊழல் தடுப்பு குழுவின் ஊழல் தடுப்புச் சட்டதிட்டத்தின் கீழ் மூன்று குற்றங்கள் தொடர்பில் அவர் குற்றவாளியாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

போட்டியின் முடிவை முறையற்ற வகையில் மாற்ற செல்வாக்கு செலுத்தியமை, ICC யின் நெறிமுறைகளை நேரடியாக அல்லது மறைமுகமாக மீறுதல் அல்லது அதனை ஊக்குவித்தல் மற்றும் ஊழல் தொடர்பான விடயங்களை வெளியிடாதிருத்தல் ஆகிய குற்றங்கள் தொடர்பிலேயே அவர் குற்றவாளியாக இனங்காணப்பட்டுள்ளனர்.

அதற்கமைய, நுவன் சொய்ஷாவுக்கு எதிரான தடை அறிவிப்பு தொடர்பில் பின்னர் அறிவிக்கப்படும் என்றும் அதுவரை அவருக்கு கிரிக்கெட் விளையாடத் தடை விதிக்கப்படுவதாக, சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலினால் (ICC) அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், ரி10 லீக்கில் பங்கேற்றமை தொடர்பில் எமிரேட்ஸ் கிரிக்கெட் சபையின் (ECB) ஊழல் தடுப்பு குறியீட்டின் நான்கு எண்ணிக்கையை மீறியதாக எமிரேட்ஸ் கிரிக்கெட் சபை (ECB) சார்பாக, ICCயும், நுவன் சொய்ஷா மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இது தொடர்பிலான நடவடிக்கைகள் தொடர்ந்தும் இடம்பெற்று வருவதாக, ICC மேலும் தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here