LPL சுவாரஸ்யமிழக்கிறதா?: கெய்ல், மலிங்க இல்லை!

எல்.பி.எல் தொடரில் யுனிவெர்சல் பாஸ் கிறிஸ் கெய்ல், இலங்கை ரி 20 அணி தலைவர் லசித் மலிங்க ஆகியோர் பங்குபற்றமாட்டார்கள் என தகவல் வெளியாகியுள்ளது.

கொரோனா நெருக்கடிக்குள் பல தடங்கல்களின் மத்தியில் எல்.பி.எல் தொடரை நடத்த இலங்கை கிரிக்கெட் சபை தொடர்ந்து முயற்சிகள் மேற்கொண்டு வருகிறது. எனினும், இந்த முயற்சியில் பல்வேறு இடையூறுகள் ஏற்பட்டு வருகிறது.

இந்த வகையில் தற்போது எல்.பி.எல் தொடரில் கிறிஸ் கெய்ல் விளையாட மாட்டார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. தனிப்பட்ட காரணங்களின் அடிப்படையில் அவர் விலக முடிவெடுத்துள்ளதாக தெரிய வருகிறது.

இதேவேளை, இலங்கை ரி20 அணித்தலைவர் லசித் மலிங்க தொடரில் பங்கேற்க விரும்பவில்லையென்பதை, கிரிக்கெட் நிர்வாகத்திற்கு அறிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 8 மாதங்களாக பயிற்சியில் ஈடுபடாமல் இருந்து வரும் மலிங்க, திடீரென இந்த தொடரில் களமிறங்க விரும்பவில்லை.

இது குறித்த அறிவிப்பை அவர் அடுத்த சில தினங்களில் பகிரங்கமாக அறிவிப்பார் என தெரிவிக்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here