எஸ்.ஏ.சந்திரசேகரன் புது கட்சி: எனக்கு தெரியாதென விஜய் மறுப்பு

அகில இந்திய தளபதி மக்கள் இயக்கம் என்ற பெயரில் நடிகர் விஜயின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் அரசியல் கட்சியை பதிவு செய்ய விண்ணப்பித்துள்ளார்.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக உள்ள விஜய் அரசியலுக்கு வரவேண்டும் என அவரது ரசிகர்கள் தொடர்ந்து அழைப்பு விடுத்து வருகின்றனர். நற்பணி மன்றங்களாக இருந்த விஜய் ரசிகர் மன்றங்கள் விஜய் மக்கள் இயக்கமாக மாற்றப்பட்டது. விஜய் மக்கள் இயக்கத்தின் நிர்வாகத்தை நடிகர் விஜயின் தந்தையும் இயக்குனருமான எஸ்.ஏ.சந்திரசேகர், கவனித்து வந்தார்.

இந்நிலையில் விஜய் மக்கள் இயக்கம், தேர்தல் ஆணையத்தில், ‘அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்கம்’ என்ற பெயரில் கட்சியாக பதிவு செய்ய விண்ணப்பித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும், கட்சியின் பொதுச் செயலாளராக விஜயின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர், பொருளாளராக தாய் ஷோபனா பெயர்கள் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர் இது குறித்து விளக்கமளிக்கையில்-

“இது என்னுடைய முயற்சிதான். இது விஜயின் அரசியல் கட்சி அல்ல. அகில இந்திய தளபதி மக்கள் இயக்கம் என்ற பெயரில் அரசியல் கட்சியை பதிவு செய்ய நான் தான் விண்ணப்பித்துள்ளேன். அவர் கட்சி அரசியலில் நுழைகிறாரா என்பது குறித்து என்னால் கருத்து சொல்ல முடியாது என்று தெரிவித்துள்ளார்.

விஜய்யும் இந்த தகவலை மறுத்துள்ளார். தந்தை கட்சி ஆரம்பித்த விடயம் செய்திகளின் வாயிலாகவே தனக்கு தெரியுமென்றும், அதற்கும் தனக்கும் தொடர்பில்லையென்றும் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here