கிழக்கு மாகாண கொரோனா தொற்றாளர்கள் எண்ணிக்கை 100ஐ கடந்தது!

கிழக்கு மாகாணத்தில் நேற்று (3) கொரோனா தொற்றுடன் 4 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் அ.லதாகரன் இதனை தெரிவித்தார்.
சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளான காத்தான்குடி, அம்பாறை, தமண, தெஹியத்தகண்டி பகுதிகளில் தலா ஒவ்வொரு தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

மினுவாங்கொட- பேலியகொட கொத்தணி ஆரம்பித்த பின்னர் கிழக்கு மாகாணத்தில் 77 பேர் தொற்றிற்குள்ளாகியுள்ளனர். அதன்படி, திருகோணமலையில் 13 பேர், மட்டக்களப்பில் 41 பேர், கல்முனையில் 17 பேர், அம்பாறையில் 6 பேர் தொற்றிற்குள்ளாகியுள்ளனர்.

இதேவேளை, கடந்த ஜனவரி மாதம் கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டதில் இருந்து இன்று வரை கிழக்கில் 101 பேர் கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here