பிசிஆர் இயந்திரத்தை சரி செய்ய சீனக்குழு வந்தது!

முல்லேரியா வைத்தியசாலையில் பொருத்தப்பட்டிருந்த நிலையில் பழுதடைந்த பி.சி.ஆர் இயந்திரத்தை சரிசெய்ய வல்லுநர்கள் குழு நேற்று இரவு சீனாவிலிருந்து வந்துள்ளது.

இந்த இயந்திரம் செயற்படாமல் போனதால் பிசிஆர் முடிவுகளை பெறுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இலங்கையில் உள்ள பிசிஆர் இயந்திரங்களில் அதிக பரிசோதனையை செய்யக்கூடிய இயந்திரம் இதுவாகும்.

“இலங்கையின் உடனடி வேண்டுகோளின் பேரில் பி.சி.ஆர் இயந்திர உற்பத்தி நிறுவனத்தின் தொழில்நுட்ப வல்லுநர்கள் விமானம் வழியாக இன்று இரவு கொழும்பில் தரையிறங்கியுள்ளதை நாங்கள் அறிவோம் ”என்று கொழும்பில் உள்ள சீன தூதரகம் நேற்று இரவு ருவீட் செய்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here