இலங்கை வந்தார் புதிய சீன தூதர்!

இலங்கைக்கான புதிய சீனத் தூதர் குய் ஜென்ஹோங் நேற்று மாலை கொழும்பை வந்தடைந்தார்.

MU231 இலக்க சீனா ஈஸ்டர்ன் ஏர்லைன்ஸ் விமானத்தில் நாட்டை வந்தடைந்தார். அவர் சீனாவில் பிசிஆர் பரிசோதனை முடித்த பின்னர் வந்தார். இரண்டு வாரங்கள் சுய தனிமைப்படுத்தலில் இருந்த பின்னர் கடமைகளை பொறுப்பேற்பார் என்று சீன தூதரகம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

நாட்டின் தற்போதைய கடினமான சூழ்நிலையை கருத்தில் கொண்டு, தூதர் குய் விமான நிலையத்தில் அனைத்து வரவேற்பு ஏற்பாடுகளையும் பணிவுடன் மறுத்துவிட்டார். அவரை வரவேற்க தூதரகத்திலிருந்து குறைந்த எண்ணிக்கையிலானவர்கள் மட்டுமே விமான நிலையம் சென்றனர்”என்று தூதரகம் தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here