மட்டக்களப்பில் மேலும் ஒருவருக்கு கொரோனா!

மட்டக்களப்பில் மேலும் ஒருவர் கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இன்று மாலை வெளியான பிசிஆர் முடிவுகளின்படி, கோரளைப்பற்று மத்தி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில்- வாழைச்சேனை- தொற்றுடன் ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

பேலியகொட கொத்தணியுடன் தொடர்புடைய தொற்றாளர் ஒருவரின் உறவினரே இவர்.

இதன்மூலம் மட்டக்களப்பில் அடையாளம் காணப்பட்ட கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 34 ஆக உயர்ந்துள்ளது. கிழக்கில் அடையாளம் காணப்பட்ட தொற்றாளர்களின் எண்ணிக்கை 55 ஆக உயர்ந்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here