முல்லைத்தீவில் மரம் முறிந்து விழுந்து உயிரிழந்த இருவருக்கான இழப்பீட்டுத் தொகை வழங்கி வைப்பு

முல்லைத்தீவு மாவட்டத்தில் கடந்த 29.8.2020 அன்று சிலாவத்தை பகுதியில் வீதியோரத்தில் நின்ற மரம் முறிந்து விழுந்ததில் வீதியால் சென்ற இரண்டு நபர்கள் உயிரிழந்திருந்தனர்.

கடும் காற்றுடன் கூடிய மழை காரணமாக வீதியோரத்தில் நின்ற மரம் வீதியால் பயணித்த இவர்கள் மீது சரிந்து விழுந்ததில் மூன்று பிள்ளைகளின் தந்தையான 33 வயதுடைய இருதயபாலன் ஜெம்சி விஜேந்திரன் மற்றும் 21 வயதுடைய எட்வேட்அரியராசா எமில்டன் ஆகியோர் உயிரிழந்திருந்தனர்.

இந்நிலையில் குறித்த அனர்த்தம் தொடர்பில் முல்லைத்தீவு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவினர் மேற்கொண்ட முயற்சிகளின் பயனாக தேசிய அனர்த்த நிவாரண சேவைகள் நிலையத்தின் ஊடாக உயிரிழந்த இருவருக்கும் தலா 2 லட்சத்து 50 ஆயிரம் ரூபா நிதி உதவி வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

இதன் முதல் கட்டமாக இருவருக்கும் தலா 25,000 ரூபா வீதம் கொடுப்பனவு மரணவீட்டில் வழங்கி வைக்கப்பட்ட நிலையில் மீதி கொடுப்பனவுகள் இன்று வழங்கி வைக்கப்பட்டது.

இன்று காலை 10 மணியளவில் முல்லைத்தீவு மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் முல்லைத்தீவு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் உடைய உதவி பணிப்பாளரின் இ.இலிங்கேஸ்வரகுமார் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் க.விமலநாதன், முல்லைத்தீவு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன், முல்லைத்தீவு மாவட்ட செயலக உதவி மாவட்ட செயலாளர் திருமதி லிசோ கேகிதா உள்ளிட்ட மாவட்ட செயலக அதிகாரிகள் கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் ம.உமாமகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு இந்த கொடுப்பனவுகளை வழங்கி வைத்தனர்.

இந்த அனர்த்தத்தின் போது உயிரிழந்த இருதயபாலன் ஜெம்சிவிஜேந்திரன் அவர்களது மனைவி பிரிந்து வாழ்கின்ற நிலையில் அவருடைய மூன்று பிள்ளைகளும் அவருடைய அப்பா அம்மாவுடன் (இருதயபாலன் செசிலியம்மா )வாழ்ந்து வருகின்றனர் இந்நிலையில் குறித்த கொடுப்பினை அவருடைய பிள்ளைகளுக்கு வழங்குமாறு உயிரிழந்தவரின் அம்மா வழங்கிய உறுதிமொழியை பிரகாரம் அவருடைய பிள்ளைகளாகிய ஜெ.பிறைகஷா அவர்களுக்கு ஒரு லட்சத்து 12 ஆயிரத்து 500 ரூபாவும் ஜெ.கணணிகன் அவர்களுக்கு 56 ஆயிரத்து 250 ரூபாவும் ஜெ. கபிநயன் அவர்களுக்கு ரூபா 56 ஆயிரத்து 250 ரூபாவும் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

அதேபோன்று இந்த சம்பவத்தில் உயிரிழந்த எமில்டன் திருமணமாகாத நிலையில் அவருடைய தாயாருக்கு 2 லட்சத்து 25 ஆயிரம் ரூபா கொடுப்பனவு வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here