முன்னணி- கூட்டமைப்பு மோதலை விட ருவிற்றரில் அமெரிக்காவுடன் மோசமாக மோதும் சீன தூதரகம்!

இலங்கையுடனான இராஜதந்திர அணுகுமுறையில் அமெரிக்கா ஒரே நேரத்தில் இரண்டு எதிரெதிர் பாத்திரங்களை வகிப்பதாக கொழும்பில் உள்ள சீனத் தூதரகம் இன்று ருவிற்றரில் குற்றம் சாட்டியுள்ளது.

அமெரிக்க இராஜாங்க செயலாளர் மைக் பொம்பியோ இன்று கொழும்பில் உரையாற்றிய போது, சீனா ஒரு வேட்டையாடுபவர் என்று கூறியமைக்கு கொழும்பிலுள்ள சீன தூதரகம் இந்த பதிலை வழங்கியுள்ளது.

அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் மைக்கல் பொம்பியோ இலங்கைக்கான தனது 2 நாள் உத்தியோகபூர்வ விஜயம்த்தை இன்று பிற்பகல் முடித்தார்.

இன்று கொழும்பில் வெளிவிவகார அமைச்சில் நடைபெற்ற கூட்டு ஊடக மாநாட்டில் உரையாற்றிய பொம்பியோ, சீனா ஒரு வேட்டையாடும் நாடு என்றும், நிலத்திலும் கடலிலும் இறையாண்மையை தொடர்ந்து மீறி வருவதாகவும் கூறினார்.

அமெரிக்கா ஒரு நண்பராகவும் பங்காளியாகவும் வருவதாகவும், ஜனநாயக விழுமியங்களின் அடிப்படையில் இலங்கையுடனான கூட்டணியை முன்னோக்கி கொண்டு செல்ல விரும்புகிறார் என்றும் அவர் கூறினார்.

இதற்கு பதிலளித்துள்ள சீனா,

“மன்னிக்கவும் திரு.பொம்பியோ, நாங்கள்  சீனா- ஸ்ரீலங்கா நட்பையும் ஒத்துழைப்பையும் ஊக்குவிப்பதில் மும்முரமாக இருக்கிறோம், உங்கள் #AlienVsPredator விளையாட்டு அழைப்பில் ஆர்வம் காட்டவில்லை. அமெரிக்கா எப்போதுமே ஒரே நேரத்தில் இரண்டு வேடங்களில் நடிக்க முடியும்” என தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here