மேலும் 75 பேருக்கு கொரோனா!

மேலும், 75 புதிய கொரோனா தொற்றாளர்கள் கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து நாட்டில் உறுதிப்படுத்தப்பட்ட கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 7,429 ஆக அதிகரித்துள்ளது.

இன்று 275 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அரசு தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

தனிமைப்படுத்தல் மையங்களில் இருந்து 37 பேர், நாடு முழுவதும் உள்ள மீன் பிடி துறைமுகங்களிலிருந்து 24 பேர், கொரோனா தொற்றாளர்களுடன் தொடர்பில் இருந்த 215 பேர் இன்று தொற்றுடன் அடையாளம் காணப்பட்டனர்.

அதன்படி, மினுவாங்கொட- பேலியகொட கொரோனா கொத்தணியில் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 3,958 ஆக அதிகரித்துள்ளது.

10 வெளிநாட்டினர் உட்பட 3,700 நோயாளிகள் தற்போது நாடு முழுவதும் 27 கொரோனா மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்த 70 பேர் இன்று வீடு திரும்பினர். இதன்மூலம் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 3,714 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனா தொற்று சந்தேகத்தில் 481 பேர் மருத்துவ கண்காணிப்பில் உள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here