காணாமல் போன மாணவன் கிளிநொச்சியில் கிணற்றிலிருந்து சடலமாக மீட்பு: கொலையா?

கிளிநொச்சி தர்மபுரம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் கிணறு ஒன்றிலிருந்து மாணவனின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. நேற்று காணாமல் போன மாணவன் இன்று (24) சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

கிளிநொச்சி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கட்டைக்காடு பகுதியில் இருந்து தர்மபுரம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட தருமபுரம் பகுதியில் நடைபெற்ற திருமண நிகழ்வு ஒன்றுக்காக நேற்று (23) சென்ற மாணவன், வீடு திரும்பவில்லை. இதையடுத்து, உறவினர்கள் மாணவனை தேட ஆரம்பித்தனர்.

இந்த நிலையில் தர்மபுரம் பகுதியிலுள்ள கிணறு ஒன்றிலிருந்து மாணவனின் சடலம் இன்று மீட்கப்பட்டுள்ளது.

மோகநாதன் தர்சன் (18 ) என்ற தருமரபுரம் மத்திய கல்லூரியில் உயர்தரம் கல்வி கற்று வரும் மாணவன் ஒருவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

மாணவன் கொலை செய்யப்பட்டாரா அல்லது தற்கொலை செய்து கொண்டாரா என்பது பற்றி பொலிசார் மேலதிக விசாரணைகளை நடத்தி வருகிறார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here