ஊழியர்களிற்கு கொரோனா: ஹில்டன், கோல் பேஸ் நட்சத்திர ஹோட்டல்களும் தற்காலிகமாக பூட்டு!

கொழும்பு ஹில்டன் ஹொட்டலின் ஊழியர் ஒருவர் கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்டதை தொடர்ந்து, ஹொட்டலின் நடவடிக்கைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

வெள்ளிக்கிழமை முதல் ஹொட்டலின் நடவடிக்கைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.

ஹொட்டல் ஊழியருக்கு எப்படி கொரோனா தொற்று உறுதியானது என்பது கண்டறியப்படவில்லை. ஹொட்டல் வளாகத்தில் அவர் தொற்றிற்கு உள்ளானாரா என்பதை உறுதிப்படுத்த முடியவில்லையென கொழும்பு மாநகரசபை சுகாதார வைத்திய அதிகாரி தெரிவித்துள்ளார்.

இதேவேளை, கோல் பேஸ் ஹோட்டலும் தற்காலிகமாக நடவடிக்கைகளை நிறுத்தியுள்ளது. செயல்பாட்டை நிறுத்துமாறு சுகாதார பரிசோதகர்கள் உத்தரவிட்டதாக தெரிவிக்கப்படுகிறது.  அனைத்து ஹோட்டல் ஊழியர்களும் இன்று பி.சி.ஆர் சோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள்.

ஹோட்டலில் நடக்க திட்டமிடப்பட்ட சில முக்கிய நிகழ்வுகளை இரத்து செய்யுமாறு ஷாங்க்ரி லா ஹொட்டலுக்கு சுகாதார பரிசோதகர்கள் அறிவித்துள்ளதுனர். ஏன் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது என்பதற்கான காரணம் வெளியாகவில்லை. அங்கு தொற்றாளர்கள் யாரும் கண்டுபிடிக்கப்பட்டார்களா என்பது தெரியவரவில்லை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here