18 மில்லியன் கிலோ கிராம் இரசாயன உரம், 45 ஆயிரம் லீற்றர் கிருமி நாசினி: கிளிநொச்சியில் ஒரு வருடத்தில் பயன்படுத்தப்படுகிறது!

கிளிநொச்சியில் ஒரு வருடத்தில் 18 மில்லியன் கிலோ கிராம் இரசாயன
உரமும், 45 ஆயிரம் லீற்றர் கிருமி நாசினியும் பயன்படுத்தப்படுகிறது.

கிளிநொச்சி மாவட்டத்தில் வருடம் தோறும் நெற்செய்கை 90 ஆயிரம் ஏக்கர்
பரப்பளவில் மேற்கொள்ளப்படுகிறது. காலபோகத்தில் 70 ஆயிரம் ஏக்கர்
பரப்பளவிலும், சிறுபோகத்தில் 20 ஆயிரம் ஏக்கபர் பரப்பளவுமாக நெற்செய்கை
மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதன் போது ஒரு ஏக்கர் நெற் பயிர்ச்செய்கைக்கு அடி உரம், வீ1, யூரியா, ரிஎஸ்பி,
ரிடிஎம் போன்ற இரசாயன உரங்கள் சுமார் 200 கிலோ கிராம்
பயன்படுத்தப்படல் தேவை எனவும், சில சந்தர்ப்பங்களில் இது 225 கிலோ கிராம்
அல்லது 175 கிலோகிராம் என கூடி குறையும் எனவும் தெரிவிக்கும் விவசாயிகள்
சராசரியாக ஒரு ஏக்கர் நெற் பயிர்ச்செய்கைக்கு 200 கிலோ கிராம் இரசாய உரம்
பயன்படுத்தப்பட்டு வருகிறது எனத் தெரிவிக்கின்றனர்.

எனவே கிளிநொச்சியின் சுமார் 90 ஆயிரம் ஏக்கர் நெற் பயிர்ச்செய்கை
நிலத்தில் ஒரு ஏக்கருக்கு 200 கிலோ கிராம் படி இரசாயன உரங்கள் பயன்படுத்தப்படுகின்ற போது மொத்தமாக வருடந்தோறும் கிளிநொச்சியின் நிலங்களில் 18 மில்லியன் கிலோ கிராம் அதாவது ஒரு கோடியே 80 இலட்சம் கிலோ இரசாயன உரம் பயன்படுத்தப்படுகிறது. (90000×200) சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அவ்வாறே ஒரு ஏக்கர் நெற் பயிர்ச் செய்கைக்கு சுமார் 500 மில்லி லீற்றர்
கிருமி நாசினி தேவைப்படுகிறது என்றும் அதன்படி மொத்தமாக வருடந்தோறும்
90 ஏக்கர் நெற் பயிர்ச்செய்கைக்கு 45 ஆயிரம் லீற்றர் கிருமிநாசினியும் பயன்படுத்தப்படுகிறது விவசாயிகளினால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே கிளிநொச்சி மாவட்டத்தின் நெற்பயிர்ச் செய்கைக்கு மாத்திரம்
வருடந்தோறும் ஒரு கோடியே 80 இலட்சம் கிலோ கிராம் இரசாயன உரமும் 45
ஆயிரம் லீற்றர் கிருமி நாசினியும் பயன்படுத்தப்படுவது ஆரோக்கியமற்ற
சூழல் எனவும், வருடந்தோறும் இவ்வாறு பயன்படுத்தப்படுகின்ற போது நிலம்
நஞ்சாக மாறிவிடும் எனவும் இதனால் மனித ஆரோக்கியம் மற்றும் சுற்றுச்
சூழலுக்கு பெரும் ஆபத்து எனவும் சூழலியலாளர்களும்
சுட்டிக்காட்டியுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here