மீன்பிடி துறைத்தில் மார்புவலியால் அவதிப்பட்டவர் உயிரிழப்பு!

காலி மீன்பிடி துறைமுகத்தில் இருந்த மீனவர் ஒருவர் நெஞ்சுவலியால் உயிரிழந்துள்ளதாக காலி துறைமுக பொலிசார் தெரிவித்தனர்.

துறைமுகத்திற்குள் இருந்தபோது மார்பு வலி ஏற்பட்டதை தொடர்ந்து, கராபிட்டி போதனா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

மருத்துவமனையின் அவசர பிரிவில் சிகிச்சை பெற்று மீனவர் உயிரிழந்துள்ளார். மீன்பிடி துறைமுகங்களில் கொரோனா தொற்று அடையாளம் காணப்பட்டு வருவதால், இவரது உயிரிழப்பு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அவரது உடலில் இருந்து சோதனைகளுக்கு மாதிரிகள் எடுக்கப்பட்டுள்ளதாக பொலிசார் கூறுகின்றனர். இறந்த மீனவரின் பிரேத பரிசோதனை இன்று (24) காலியில் உள்ள கராபிட்டி போதனா மருத்துவமனையில் நடைபெற உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here