நிலைமை மோசம்தான்; ஆனால் கட்டுப்பாட்டில் இருக்கிறது: அரசு!

இலங்கையில் கொரோனா வைரஸ் நிலைமை இப்போது ஆபத்தானது, ஆனால் கட்டுப்பாட்டில் உள்ளது என்று சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

866 கொரோனா வைரஸ் நோயாளிகள் நேற்று கண்டறியப்பட்டனர். இலங்கையில் ஒரேநாளில் கண்டறியப்பட்ட கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை இதுவாகும். கொத்தணி தொற்று மட்டுமே தற்பேர்து உள்ளது என அரசு அடம்பிடித்து வந்தாலும், நாட்டின் பல பாகங்களிலும் தொற்றாளர்கள் கொத்துக் கொத்தாக அடையாளம் காணப்பட்டு வருகிறார்கள்.

மினுவாங்கொட தொற்று அலையாகி பெருமளவானவர்கள் பாதிக்கப்பட்ட நிலையில், பேலியகொட தொற்று அலை இப்போது அடிக்க ஆரம்பித்துள்ளது.

இந்த நிலையில், சமீப நாட்களில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் நோயாளிகளின் எண்ணிக்கையில் அதிகரிப்பு இருப்பதாக பொது சுகாதார சேவைகளின் துணை இயக்குநர் வைத்தியர் ஹேமந்த ஹெரத் தெரிவித்தார்.

இப்போது நிலைமை மிகவும் சிக்கலானது என்பதை பொதுமக்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்று அவர் கூறினார்.

இருப்பினும், நிலைமை கட்டுப்பாட்டை மீறவில்லை என்றார்.

ஹேமந்த ஹேரத் கூறுகையில், பொதுமக்கள் தங்கள் முழு ஆதரவை வழங்கத் தவறினால் நிலைமை கட்டுப்பாட்டிலிருந்து வெளியேற முடியும். அதிகாரிகள் வழங்கிய அனைத்து சுகாதார வழிகாட்டுதல்களையும் அவர்கள் பின்பற்றுவதை உறுதி செய்யுமாறு பொதுமக்களிடம் கேட்டுக் கொள்கிறோம்.

பொதுமக்கள் வெளிப்பயணங்களை மட்டுப்படுத்தி,அவசர தேவை ஏற்பட்டால் மட்டுமே வீடுகளுக்கு வெளியே பயணிக்க வேண்டும் என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here