மணிவண்ணன் ஆதரவாளரை கட்சியை விட்டு நீக்கியதற்கு இடைக்கால தடை: கஜேந்திரகுமாரை நீதிமன்றத்தில் முன்னிலையாக உத்தரவு!

அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியில் இருந்து நீக்கப்பட்டதற்கு எதிராக யாழ் மாநகரசபை உறுப்பினர் ம.மயூரனை நீக்கிய நடவடிக்கைக்கு, யாழ் நீதிவான் நீதிமன்றம் இடைக்கால தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.

யாழ் மாநகரசபை உறுப்பினரான ம.மயூரன், சட்டத்தரணி வி.மணிவண்ணனின் ஆதரவாளர். மணிவண்ணனை கட்சியை விட்டு நீக்குவதுடன், அவரது ஆதரவாளர்களையும் கட்சியை விட்டு நீக்கும் நடடிக்கையில் தமிழ் காங்கிரஸ் ஈடுபட்டது.

இதன்படி, பேஸ்புக்கில் அறிஞர் ஒருவரின் கருத்தை பகிர்ந்த குற்றச்சாட்டில் ம.மயூரனை கட்சியை விட்டு நீக்கியதுடன், அவரது உள்ளூராட்சி உறுப்புரிமையையும் தமிழ் காங்கிரஸ் பறித்தது.

தன்னை கட்சியை விட்டு நீக்கியதற்கு எதிராக மயூரன் நேற்று, யாழ் நீதிவான் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுக்கப்பட்டது.

வழக்கை விசாரித்த நீதிவான், மயூரனை கட்சியை விட்டு நீக்கிய முடிவிற்கு எதிர்வரும் நவம்பர் 6ஆம் திகதி வரை இடைக்கால தடை உத்தரவு பிறப்பித்தார். அத்துடன், நவம்பர் 6ஆம் திகதி வரை வழக்கை ஒத்திவைத்தார்.

நவம்பர் 6ஆம் திகதி தமிழ் காங்கிரசின் தலைவர் ஆனந்தராஜா, கஜேந்திரகுமார் உள்ளிட்டவர்களை மன்றில் முன்னலையாகவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here