பிரதேசசபை உறுப்பினர் கைது!

வலம்புரி சங்கு, பழங்கால நாணயங்கள், பழமையான சிலைகளை வாங்கிய சந்தேகத்தில் சீதவாக்கபுர பிரதேச சபை உறுப்பினர் மற்றும் 3 பேரை ஹட்டன் பொலிசார் கைது செய்துள்ளனர்.

புதன் கிழமை இரவு 8.30 மணியளவில் வாகனமொன்றில் ஹட்டனிற்கு வந்து, ஒரு குழுவினருடன் பொருட்களை வாங்குவது குறித்து விவாதித்தபோது, பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவர்கள் தமது கையடக்க தொலைபேசி வட்ஸ்அப் செயலி மூலம் பழங்கால பொருட்களின் புகைப்படங்களை பரிமாறிக் கொண்டதும் தெரிய வந்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here