கிளிநொச்சியில் மாணவனை தேவாரம் பாட அனுமதிக்காத ஆலய நிர்வாகம் மீது நடவடிக்கை!

கிளிநொச்சி பெரியபரந்தன் டி5 பகுதியில் அமைந்துள்ள பிள்ளையாளர்
ஆலயத்தில் மாணவன் ஒருவருக்கு தேவவாரம் பாட ஆலய நிர்வாகம் அனுமதி மறுத்த
விடயம் தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என கரைச்சி பிரதேச
செயலாளர் ஜெயாகரன் தெரிவித்துள்ளார்.

குறித்த விடயம் தொடர்பில் இன்று(19) அவரை நேரில் சந்தித்து வினவிய போதே
அவர் இதனை தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்

கலாசார உத்தியோகத்தர், மற்றும் சம்மந்தப்பட்ட தரப்பினர்களுடன்
கலந்துரையாடி குறித்த விடயம் தொடர்பில் ஆராய்ந்து உரிய நடவடிக்கை
மேற்கொள்ளப்படும் எனக் குறிப்பிட்டார்

சாதிய பாரபட்சம் காரணமாக குறித்த ஆலயத்தில் மாணவன் ஒருவனுக்கு தேவாரம்
பாட அனுமதி மறுக்கப்பட்டு வந்திருக்கிறது . இது தொடர்பில் தகவல் கிடைத்து
கடந்து ஞாயிற்றுக் கிழமை குறித்த ஆலயத்திற்கு சென்று ஊடகவியலாளர் ஒருவர்
குறித்த சம்பவம் தொடர்பில் நிலைமையினை நேரில் பதிவு செய்திருந்தார்.
அன்றும் மாணவனுக்கு தேவாரம் பாட அனுமதி மறுத்து ஆலயத்திலிருந்து
வெளியேற்றப்பட்ட சம்வத்தை செய்தியாக்கியதோடு அது சமூக வலைத்தளங்களிலும்
பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது. எனவே தொடர்பில் பலரும் தங்களது
கடுமையான கண்டனத்தை வெளிப்படுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here