மட்டு போதனா வைத்தியசாலையில் சிறுமி மரணம்: கதிரியக்கவியலாளர்களின் பணிப்பகிஸ்கரிப்பால் துயரம்!

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிறுமியொருவர் உயிரிழந்துள்ளார். விபத்தில் சிக்கி ஆபத்தான நிலையில் நிறுமி அனுமதிக்கப்பட்டிருந்த  நிலையில், கதிரியக்கவியலாளர்களின் பணிப்பகிஸ்கரிப்பு காரணமாக உரிய சிகிச்சை பெற முடியாமவ் நேற்று (20) இரவு உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

தேத்தாத்தீவை சேர்ந்த மயில்வாகனன் சனுஸிகா (8 ) என்ற சிறுமி நேற்று விபத்திற்குள்ளானார்.

களுவாஞ்சிக்குடியில் விபத்துக்குள்ளாகி மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் கதிரியக்கவியலாளர்களின் பணிப்பகிஸ்கரிப்பு காரணமாக சிறுமிக்கு குறிப்பிட்ட நேரத்திற்குள் சிரி ஸ்கான் செய்யப்படவில்லை.

தமது மகளின் மரணத்திற்கு பணிப்பகிஸ்கரிப்பே காரணமென தாயார் குற்றம்சாட்டியுள்ளார். பல மணித்தியால தாமதத்தின் பின்னரே சிகிச்சைக்கு எடுத்ததாகவும், இது தொடர்பில் பொலிசில் முறையிடவுள்ளதாகவும் தாயார் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here