சம்மாந்துறை முஸ்லிம் மத்திய மகா வித்தியாலயத்தின் உடைந்த மதிலை தாங்கி நிற்கும் ஒற்றைப்பலகை!

சம்மாந்துறை முஸ்லிம் மத்திய மகா வித்தியால மதில் வெடிப்படைந்து விழும் நிலையில் காணப்படுகின்றது.

அம்பாறை மாவட்டத்தில் உள்ள சம்மாந்துறை வலயத்தில் காணப்படும் தேசிய பாடசாலையான இப்பாடசாலையின் சுற்றுமதிலில் ஒரு மாதத்திற்கும் மேலாக வெடிப்பு ஏற்பட்டு உடைந்து விடும் நிலையில் காணப்படுகின்றது.

இவ்வாறு வெடிப்படைந்து விழும் நிலையில் உள்ள மதிலை தாங்கி ஒரு மரத்திலான பலகை பொருத்தப்பட்டுள்ளமை அவதானிக்க முடிகின்றது.

குறித்த பாடசாலை வீதியை பயன்படுத்தும் பாதசாரிகள் முதல் பாடசாலை மாணவர்கள் அச்சத்துடன் பயணிக்கின்றனர்.

எனவே இப்பாடசாலையின் பொறுப்புவாய்ந்த அதிகாரிகள் பழைய மாணவர்கள் இவ்விடயத்தில் கவனம் எடுத்து செயற்பட வேண்டும் என கோரிக்கை விடுக்கப்படுகின்றது.

-பா.டிலான்-

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here