முல்லைத்தீவு மாவட்டதில் வேலை வாய்ப்பற்றிருக்கும் இளைஞர் யுவதிகளுக்கு வேலை வாய்ப்பினை ஏற்படுத்திக் கொடுக்கும் நோக்கில் மனித வலு மற்றும் வேலை வாய்ப்பு திணைக்களத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள தொழில் திறன் விருத்தி இலவச பயிற்சி நெறியானது எதிர்வரும் 05.10.2020ம் திகதி திங்கட்கிழமை காலை 09.00மணிக்கு மாவட்ட செயலகத்தில் நடைபெறவுள்ளது.
மேற்படி தொழில் திறன் விருத்தி இலவச பயிற்சி நெறியில் வேலை வாய்ப்புத் தேடும் இளைஞர் யுவதிகளை கலந்துகொண்டு பயன்பெறுமாறு முல்லைத்தீவு மாவட்ட செயலக மனித வலு மற்றும் வேலை வாய்ப்பு திணைக்களத்தினர் அறிவித்துள்ளனர்.