பெருமாள் கோயிலடி வாள்வெட்டு: யாழின் முக்கிய ரௌடி சரண்!

தனுரொக் மீது வாள்வெட்டுத் தாக்குதல் நடத்திய குற்றச்சாட்டில் பொலிஸாரால் தேடப்பட்டு வந்த வினோதன் என்பவர், யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றில் நேற்று (30) சரணடைந்தைத் தொடர்ந்து, அவரை ஒக்டோபர் 9ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.

யாழ்ப்பாணம் – மணிக்கூட்டு வீதி, பெருமாள் கோவிலடியில் சனிக்கிழமையன்று (26), கார் ஒன்றில் வந்த ரௌடிகள் சிலர், மானிப்பாயைச் சேர்ந்த தனுரொக் என்ற ரௌடி மீது வாள்வெட்டுத் தாக்குதலை மேற்கொண்டனர்.

சம்பவத்தில் படுகாயமடைந்த தனுரொக், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

இந்நிலையில், தனுரொக் வழங்கிய வாக்குமூலத்தின் அடிப்படையில், கொக்குவிலைச் சேர்ந்த மோகன் அசோக் என்பவர் ஞாயிற்றுக்கிழமை (27) கைது செய்யப்பட்டார். அவர் வழங்கிய வாக்குமூலத்தையடுத்து, மறுநாள் திங்கட்கிழமை மேலும் மூவர் கைதுசெய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவுக்கமைய, 9ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

தற்போது, இன்னொரு பிரபல ரௌடி வினோதனும் சரணடைந்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here