மட்டக்களப்பில் தியாகி திலீபனை அஞ்சலிக்க முயன்றார்களாம்: தமிழ் தேசிய கூட்டமைப்பின் 6 பிரமுகர்களை நீதிமன்றத்தில் முன்னிலையாக உத்தரவு!

மட்டக்களப்பில் தியாகி திலீபனின் நினைவை நடத்த முயன்றதாக குறிப்பிட்டுள்ள வழக்கில், ஆறு பேரை நீதிமன்றில் முன்னிலையாகும்படி மட்டக்களப்பு மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்து.

மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த 26ஆம் திகதி விடுதலைப்புலிகள் உறுப்பினர் திலீபனுக்கு நினைவு விளக்கேற்றி நடத்த முயன்றதாக மட்டக்களப்பு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி் செய்த முறைப்பாடுக்கு அமைவாக மட்டக்களப்பு நீதிமன்றம் இந்த உத்தரவையிட்டது.

தமிழ்தேசிய கூட்டமைப்பு  முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான ஞா.ஶ்ரீநேசன், பா.அரியநேத்திரன், சீ.யோகேஸ்வரன், பாராளுமன்ற உறுப்பினரான இ.சாணக்கியன், மட்டக்களப்பு மாநகரசபை முதல்வர் தி.சரவணபவான், ஜனநாய போராளிகள் கட்சி் உபதலைவர் ந. சங்கரப்பிள்ளை ஆகிய ஆறு பேரையும்
எதிர்வரும் வெள்ளிக்கிழமை நீதிமன்றில் முன்னிலையாகுமாறு கட்டளை விடுக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here