ஒட்டுசுட்டான் தான்தோன்றீஸ்வரர் ஆலய திலீபன் நினைவேந்தல் நிகழ்வில் பொலிசார் புலனாய்வாளர்கள்அடாவடி!

தமிழ் மக்களுக்காக 12 நாட்கள் உணவு நீராகாரம் ஏதுமின்றி உண்ணா நோன்பிருந்து உயிர் நீத்த தியாகி திலீபன் அவர்களுடைய நினைவேந்தல் நிகழ்வுகள் இலங்கை அரசாங்கத்தினால் நீதிமன்றங்கள் ஊடாக தடை செய்வதற்கான பல்வேறு முயற்சிகள் ஏற்பாடுகள் செய்யப் பட்டபோதும் தடைகள் அனைத்தையும் தாண்டி பல்வேறு ஆலயங்களில் நினைவேந்தல் நிகழ்வுகள் உண்ணா நோன்பு ஆகியன இடம்பெற்று வருகின்றன.

அந்த வகையில் முல்லைத்தீவு மாவட்டத்தின் தமிழ் உணர்வாளர்கள் அரசியல் பிரதிநிதிகள் பொதுமக்கள் இணைந்து ஒட்டுசுட்டான் தான்தோன்றீஸ்வரர் ஆலய வளாகத்தில் உண்ணாநோன்பு போராட்டம் ஒன்று இன்று காலைமுதல் மேற்கொண்டிருந்தனர்.

இந்த உண்ணா நோன்பு போராட்டத்தின்போது அதிகளவான பொலிஸார் புலனாய்வாளர்கள் கொண்டுவந்து இறக்கப்பட்டு போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு அச்சுறுத்தல் விடுக்கும் முகமாக பல்வேறு செயற்பாடுகளில் ஈடுபட்டதோடு, அவர்களை ஒளிப்படம் மற்றும் ஒளிப்பதிவு செய்து அச்சுறுத்தும் வகையில் செயற்பட்டு வந்தனர்.

இவ்வாறான நிலையில் ஊடகங்களுக்கு அவர்கள் கருத்து தெரிவிக்க முற்பட்டபோது அதிகளவான புலனாய்வாளர்களும் போலீசாரும் அவர்களை வீடியோ பதிவு செய்ய முற்பட்டபோது அவர்கள் அந்த வீடியோ பதிவு செய்ய வேண்டாம் என்று முற்பட்ட வேளையில் அங்கு முறுகல் நிலை ஒன்று ஏற்பட்டிருந்தது.

இதன் அடிப்படையில் குறித்த போலீசார் மற்றும் புலனாய்வாளர்களுக்கு ஊடகவியலாளர்களால் நீங்கள் வீடியோ பதிவு செய்வதனால் அங்கு இருக்கின்றவர்கள் வீடியோக்களை தருவதற்கு அஞ்சுவதாகவும் நாங்கள் ஊடகங்களுக்கு செய்தி சேகரிக்கும் போது நீங்கள் அதனை பதிவு செய்ய வேண்டாம் எனவும் கூறிய போது, அவர்கள் அதனை மறுத்து தாங்கள் பதிவு செய்வோம் என பதிவு செய்ய முற்பட்ட நிலையில் அங்கு பதட்டமான சூழல் ஏற்பட்டது

அதனை தொடர்ந்து குறித்த இடத்தில் பொலிசார் புலனாய்வாளர்கள் தாங்கள் வீடியோ எடுப்பதற்கு முற்பட்ட வேளையில் அவர்கள் ஊடகங்களுக்கும் கருத்துக்களை வெளியிடாது இவர்களுடைய அச்சுறுத்தல் சூழ்நிலை காரணமாக மாலை 2 மணியளவில் நீராகாரம் அருந்தி தங்களுடைய உண்ணாவிரத போராட்டத்தை நிறுத்திக் கொண்டதோடு குறித்த இடத்திலிருந்து வெளியே சென்று ஊடகங்களுக்கு அவர்கள் கருத்துக்களை தெரிவித்து இருந்தனர்.

ஊடக சுதந்திரம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்ற போதும் இந்த அரசாங்கத்தினுடைய ஆட்சியின் பின்னர் ஊடகங்களையும் ஊடகங்களுக்கு சுதந்திரமாக கருத்து தெரிவிக்கின்ற அரசியல்வாதிகள் பொது மக்களையும் அச்சுறுத்துகின்றன வேலை திட்டத்தில் அரசாங்கம் முனைப்போடு ஈடுபட்டிருப்பதை பிரதிபலிக்கின்ற வகையில் இந்த சம்பவம் இடம்பெற்று இருக்கின்றது.

இதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தவர்கள் எங்களுக்காக உயிரிழந்த உறவுகளை நினைவு கூறுகின்ற உரிமையை மாறி மாறி வருகின்ற அரசாங்கங்கள் தடை விதிக்கின்றது. இவ்வாறான செயற்பாடுகளை நிறுத்த வேண்டுமெனவும், எங்களுக்காக உயிர் நீத்த உறவுகளை நினைவு கூறுவதற்கான அனைத்து உரிமைகளும் எங்களுக்கு உண்டு எனவும், அவ்வாறான நினைவேந்தல் நிகழ்வுகளில் போலீசார் புலனாய்வாளர்களின் தலையீடுகள் தவிர்க்கப்பட்டு சுதந்திரமாக நாங்கள் உயிரிழந்தவர்களை அஞ்சலி செய்வதற்கு அனுமதி அளிக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here