13 வயது மகளுக்கு கட்டாயப்படுத்தி 10 போதை மாத்திரை பருக்கிய தந்தை கைது!

தனது 13 வயது மகளுக்கு போதை மாத்திரைகளை கட்டாயப்படுத்தி விழுங்க வைத்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பாணந்துறை மொடரவில சுனாமி வீட்டு திட்ட பகுதியில் இந்த சம்பவம் நடந்தது. தனது மகளிற்கு கட்டாயப்படுத்தி 10 போதை மாத்திரைகளை விழுங்க வைத்துள்ளார். அவரை கடந்த திங்கள்கிழமை பாணந்துறை ஊழல் தடுப்புப் பிரிவினால் கைது செய்யப்பட்டார்.

சிறுமி சிகிச்சைக்காக பாணந்துறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

கைதான 32 வயதானவர் மது மற்றும் போதைப் பழக்கத்திற்கு அடிமையானவர் என்று கூறப்படுகிறது. 32 வயதான சந்தேகநபர் தனது மனைவியுடன் அடிக்கடி வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.

சம்பவம் நடந்தபோது, மனைவி வீட்டில் இருக்கவில்லை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here