மாணவனின் சடலம் மீட்பு!

அம்பலாங்கொட பகுதியிலுள்ள முன்னணி பாடசாலையொன்றின் க.பொ.த உயர்தர மாணவன் ஒருவரின் சடலம் இன்று (23) காலை பலபிட்டிய பகுதி கடற்கரையில் மீட்கப்பட்டது என்று அஹுங்கல்ல பொலிசார் தெரிவித்தனர்.

பதேகமவைச் சேர்ந்த பானு சரித் டி சொய்சா (19) என்ற மாணவனின் சடலம் கண்டெடுக்கப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.

உயிரியல் பாட மாணவனான இவர் அடுத்த ஆண்டு உயர்தர பரீட்சையில் தோற்றவிருந்தார்.

கடந்த இரண்டு நாட்களாக அந்த மாணவர் காணாமல் போயிருந்தார்.

மாணவரின் பிரேத பரிசோதனை இன்று (23) பலபிட்டிய ஆதார வைத்தியசாலையில் நடைபெறும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here