தற்கொலைதாரியின் வீட்டை போலி ஆவணங்கள் மூலம் கைப்பற்ற முயன்றவர்கள் கைது!

உயிர்த்த ஞாயிறு தற்கொலைதாரி இன்சாப் அஹமட்டிற்க சொந்தமான தெமட்டகொட அடுக்குமாடி வீட்டை போலி ஆவணங்கள் தயாரித்து கைப்பற்ற முயன்ற 5 பேரை கைது செய்து, தடுத்து வைத்து விசாரணை செய்து வருவதாக கோட்டை நீதிவான் நீதிமன்றத்திற்கு சி.ஐ.டி நேற்று அறிவித்துள்ளது.

சினமன் கிராண்ட் நட்சத்திர ஹோட்டலில் இடம்பெற்ற குண்டுத்தாக்குதல்கள் குறித்து இடம்பெறும் வசாரணைகள் தொடர்பிலான நீதிவான் நீதிமன்ற விசாரணை நடவடிக்கைகள், நேற்று கோட்டை பதில் நீதிவானும் கொழும்பு மேலதிக நீதிவானுமான சலனி பெரேரா முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.

குற்ற புலனாய்வு திணைக்களத்தின் விசேட விசாரணைப் பிரிவின் அறை இலக்கம் 3 இன் பொறுப்பதிகாரி, பிரதான பெண் பொலிஸ் பரிசோதகர் தீபானி மெனிகே மேலதிக விசாரணை அறிக்கையை நீதிமன்றத்தில் சமர்ப்பித்தார்.

சினமன் கிராண்ட் ஹோட்டல் தாக்குதல் தொடர்பில் இதுவரை 4 சந்தேகநபரை கைது செய்துள்ளோம். பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் அவர்கள் தடுத்து வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகிறார்கள்.

இதேவேளை, தற்கொலை குண்டுதாரியான இன்சாப் அஹமட் வசித்த வீட்டில் சந்தேகத்திற்கிடமான முறையில் சிலர் நடவடிக்கைகளை முன்னெடுப்பதாக சிஐடிக்கு தகவல் கிடைத்தது.

அது தொடர்பில்5 பேரை கைது செய்து பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகிறார்கள்.

மெட்டகொடையிலுள்ள இந்த வீட்டை போலி உறுதியின் மூலம் இவர்கள் கையகப்படுத்த முயற்சித்தது தெரிய வந்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here