எண்ணெய் கப்பல் உரிமையாளர்களிடம் 340 மில்லியன் ரூபா இடைக்கால இழப்பீடு கோரும் இலங்கை!

எம்டி நியூ டயமண்ட் எண்ணெய்க் கப்பலின் உரிமையாளர்களிடம் 340 மில்லியன் ரூபா பணத்தை இடைக்கால இழப்பீடாக சட்டமா அதிபர் கோரியுள்ளார்.

தீயை அணைத்தமை உள்ளிட்ட பல்வேறு விடயங்களில் இலங்கைக்கு இந்த கட்டணத்தை கப்பலின் உரிமையாளர்கள் இடைக்கால கொடுப்பனவாக செலுத்த வேண்டும்.

இதற்கான எழுத்து மூலமான கோரிக்கை, கப்பல் உரிமையாளர்களின் சட்டத்தரணிகளிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, கடல் சூழலுக்கு ஏற்பட்ட எண்ணெய் கசிவு குறித்து எந்த உரிமைகோரல்களும் செய்யப்படவில்லை.

கடல் சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆணையம் சமர்ப்பித்த அறிக்கையைத் தொடர்ந்து அதற்கான இழப்பீட்டு விபரம் சமர்ப்பிக்கப்படும்.

இழப்பீட்டுத் தொகைகள் முழுமையாக செலுத்தப்படும் வரை கப்பல் இலங்கை கடற்பரப்பை விட்டு வெளியேற அனுமதிக்கப்படாது என்று சட்டமா அதிபர் தெரிவித்துள்ளார்.

இழப்பீட்டுத் தொகையைத் தீர்மானிக்க அரசாங்க அதிகாரிகளுடனும், எண்ணெய் கப்பலின் பிரதிநிதிகளுடனும் பல சுற்று விவாதங்கள் நடத்தப்பட்டன.

தீ விபத்துக்குள்ளான ‘எம்டி நியூ டயமண்ட்’ கப்பல் தற்போது மட்டக்களப்புக்கு 45 கடல் மைல் தொலைவில் உள்ளது.

என்ஜின் அறை வெடித்ததைத் தொடர்ந்து எண்ணெய் கப்பலில் இரண்டு தீ விபத்துக்கள் ஏற்பட்டன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here