மெத்தடிஸ்ட் தேவாலயத்தின் பாதிரியார்கள் – பிரதமர் கலந்துரையாடல்

கிழக்கு மாகாணத்தில் காணப்படும் பிரச்சினைகள் மற்றும் அபிவிருத்தி நடவடிக்கைகள் தொடர்பில் மெத்தடிஸ்ட் தேவாலயத்தின் பாதிரியார்கள் மற்றும் அரச அதிகாரிகள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுடன் இன்று (16) அலரி மாளிகையில் கலந்துரையாடினர்.

கிழக்கு மாகாணத்தில் திருக்கோவில், கல்முனை, அம்பாறை போன்ற பிரதேசங்களின் பாடசாலை, வைத்தியசாலை, போக்குவரத்து, கல்வி ஆகிய துறைகளில் காணப்படும் பிரச்சினைகள் தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்பட்டது.

அம்பாறை மாவட்ட அபிவிருத்தி, ஆடை மற்றும் பிற தொழிற்சாலைகளுடன் கூடிய தொழிற்துறை நகரத்தை நிறுவுதல், தேவாலயங்களை ஒழுங்குவிதிகளின் கீழ் கட்டியெழுப்புதல், கிறிஸ்தவ மத ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்புதல் மற்றும் பிள்ளைகளை கிறிஸ்தவ பாடசாலைகளுக்கு சேர்க்கும் போது ஏற்படும் பிரச்சினைகள் தொடர்பிலும் இதன்போது கலந்துரையாடப்பட்டது.

பிரதமரின் தலைமையில் நடைபெற்ற குறித்த சந்திப்பில் அருட்தந்தை. பீ.எஸ்.சமீர சில்வா, பிரதமரின் செயலாளர் காமினி செனரத், மேலதிக செயலாளர்களான சமிந்த குலரத்ன, அன்டன் பெரேரா, கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா, புத்தசாசன, சமய மற்றும் கலாச்சார அலுவல்கள் அமைச்சின் பணிப்பாளர் சதுரி பிந்து, கிழக்கு மாகாண பிரதி தலைமை செயலாளர் எச்.ஈ.எம்.டப்ளிவ்.ஜீ.திசாநாயக்க, கிழக்கு மாகாண கல்வி செயலாளர் ஐ.கே.ஜீ.முதுபண்டா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here