முள்ளிவாய்க்காலில் அடையாளம் காணப்பட்டது புலிகளின் ஆயுதக்கிடங்கா?

முல்லைத்தீவு மாவட்டத்தின் முல்லைத்தீவு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முள்ளிவாய்க்கால் மேற்கு பகுதியில் வெடிபொருட்கள் சில கண்டு பிடிக்கப்பட்டுள்ளன.

முல்லைத்தீவு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முள்ளிவாய்க்கால் மேற்கு பகுதியில் அமைந்துள்ள ஆதிவைரவர் அரிசி ஆலைக்கு அருகில் அரிசி ஆலை உரிமையாளர் கட்டடம் ஒன்றை அமைப்பதற்காக நேற்று (15) நிலத்தை சுத்தப்படுத்திய போது அந்த பகுதியில் வெடிபொருட்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டதை தொடர்ந்து முல்லைத்தீவு போலீசாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.

இதன் அடிப்படையில் குறித்த இடத்திற்கு வருகை தந்த முல்லைத்தீவு பொலிஸார் குறித்த இடத்தில் இருந்த ஒரு தொகுதி வெடி பொருட்களை மீட்டதோடு குறித்த இடத்தில் விடுதலைப் புலிகளால் புதைத்து வைத்ததாக சந்தேகிக்கப்படும் வெடிபொருட்கள் சில இருப்பதை அடையாளம் கண்ட நிலையில் குறித்த வெடி பொருட்களை மீட்பதற்காக இன்று நீதிமன்ற உத்தரவை பெற்று இருந்தனர்.

இன்றைய தினம் நீதிமன்ற உத்தரவுக்கமைய குறித்த வெடிபொருட்களை மீட்க முற்பட்டபோது அகழ்வுக்கு ஒழுங்கு செய்யப்பட்டிருந்த ஜே சிபி இயந்திரத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக இன்று அகழ்வுப் பணிகள் இடம்பெறவில்லை.

மீண்டும் நீதிமன்றத்தின் அனுமதியோடு குறித்த பகுதி தோண்டப்பட உள்ளது.

இதேவேளை நேற்று மாலை குறித்த பகுதியில் இருந்து மீட்க்கப்பட்ட டி.என்.ரி வெடிபொருட்கள் மற்றும் சி 4 வெடிபொருட்கள், 81 mm எறிகணை, கிளைமோர், 40mm குண்டு மற்றும் விடுதலைப் புலிகளால் நவீனமாக தயாரிக்கப்பட்ட வாகன கண்ணிவெடி உள்ளிட்ட வெடி பொருட்கள் இன்றைய தினம் விசேட அதிரடிப்படையினரால் அழிக்கப்பட உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here