மாலைதீவு, தென்னிந்திய நகரங்களிற்கு இரத்மானையிலிருந்து விமான சேவை!

இரத்மலானை விமான நிலையத்தை மாலத்தீவு மற்றும் இந்தியாவின் தென் பகுதிகளில் உள்ள நகரங்களிற்கிடையிலான விமான நடவடிக்கைகளுக்கு பயன்படுத்த சுற்றுலா அமைச்சு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

1935 ஆம் ஆண்டில் இரத்மலான விமான நிலையம் அமைக்கப்பட்டது. இது, இலங்கையின் முதலாவது சர்வதேச விமான நிலையமாகும். தற்போது இரத்மலானையிலிருந்து உள்நாட்டு விமான சேவைகளும், வணிக ஜெட் விமானங்கள் மற்றும் விமானப்படை சேவைகளுக்கான தளமாகவும் பயன்படுத்தப்படுகிறது.

தற்போது பல உள்நாட்டு விமானங்கள் விமான நிலையத்தில் தினசரி இயக்கப்படுவதால், சர்வதேச விமான நடவடிக்கைகளுக்கு அமைச்சரவை ஒப்புதல் பெறப்பட்டுள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரனதுங்க தெரிவித்தார்.

இந்த விமான நிலையத்தைப் பயன்படுத்தும் விமானங்களுக்கு சலுகை எரிபொருள் நிரப்பும் கட்டணங்களுக்கும் அமைச்சரவை ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

இரத்மலானை விமான நிலையத்துடன் விமான சேவைகளை மேற்கொள்வது குறித்து மாலைதீவு எயார், வில்லா எயார் நிறுவனங்களுடன் கலந்துரையாடப்பட்டுள்ளது என்று அமைச்சர் ரணதுங்க கூறினார்.

9,000 க்கும் மேற்பட்ட மாலத்தீவு பிரஜைகள் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு நோக்கங்களுக்காக இரத்மலனவைச் சுற்றியுள்ள பகுதிகளில் வாழ்கின்றனர். இந்தியாவின் தென் மாநிலங்களிலிருந்து வரும் பலர் இரத்மலானவிற்கு அருகிலுள்ள பம்பலபிட்டி மற்றும் கொள்ளுப்பிட்டி போன்ற இடங்களில் தங்கியுள்ளனர். இந்த பயணிகளை குறிவைத்தே, இரத்மலானையிலிருந்து தென்னிந்தியா, மாலைதீவு விமான பயணங்கள் திட்டமிடப்பட்டுள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here