தோட்ட வீட்டுத்திட்டத்தில் கூரைக்கு பதிலாக கொங்ரிட் சிலப் முறையிலான கூரை

தோட்ட வீடமைப்பு மற்றும் சமுதாய உட்கட்டமைப்பு வசதிகள் இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் நேற்று பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி நிதியத்திற்கு விஜயம் செய்துள்ளார்.

நேற்று இடம்பெற்ற இந்த விஜயத்தின் போது கடந்த காலங்களில் நிதியத்தினால் மேற்கொள்ளபட்ட செயற்பாடுகள் மற்றும் எதிர்வரும் காலங்களில் முன்னெடுக்கபடவுள்ள அபிவிருத்தி திட்டங்கள் அத்தோடு மலையக வீடமைப்பு தொடர்பாகவும் இராஜாங்க அமைச்சர் கலந்துரையாடியுள்ளார்.

இதன்போது கடந்த அரசாங்கத்தினால் முன்னெடுக்க வீடமைப்பு திட்டங்களில் பல்வேறு குறைப்பாடுகள் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகளை நிவர்த்தி செய்வது தொடர்பாகவும் அமைச்சர் கலந்துரையாடினார்

எதிர்காலத்தில் அமைச்சினால் முன்னெடுக்கபடவுள்ள வீட்டுத்திடத்தில் வீட்டின் கூரைக்கு பதிலாக கொங்ரிட் சிலப் முறையிலான கூரை அமைப்பது தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டதாக இராஜாங்க அமைச்சின் ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இக்கலந்துரையாடலில் பிரதமரின் இனைப்பு செயலாளர் செந்தில் தொண்டமான் பெருந்தோட்ட மனித வள அபிவிருத்தி நிதியத்தின் அதிகாரிகள், பெருந்தோட்ட நிறுவனங்களின் நிறைவேற்று அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here