பெண் ஊழியரிடம் பாலியல் இலஞ்சம் கோரிய அதிகாரி: நூதனமாக வீடியோ எடுத்து பகிரங்கப்படுத்தினார்!

கூட்டு ஆதன முகாமைத்துவ அதிகாரசபையின் அதிகாரியொருவர், தனக்கு கீழ் பணியாற்றிய இளம் யுவதியான ஊழியர் ஒருவரிடம் பாலியல் இலஞ்சம் கோரும் வீடியோ வெளியாகி சமூக ஊடகங்களில் பரபரப்பாக பகிரப்பட்டு வருகிறது.

இதையடுத்து வீடமைப்பு மற்றும் சமுர்த்தி அமைச்சு, உள்ளக விசாரணையை ஆரம்பித்துள்ளது.

இளம் யுவதியான ஊழியர் ஒருவரிடம், கூட்டு ஆதன முகாமைத்துவ அதிகாரசபையின் அதிகாரியொருவர் பாலியல் இலஞ்சம் கோரும் காட்சிகள் வீடியோவில் பதிவாகியுள்ளது.

குறிப்பிட்ட அதிகாரிக்கு தெரியாமல், அந்த பெண் ஊழியர் நுட்பமாக அந்த சம்வத்தை பதிவு செய்துள்ளார்.

அந்த வீடியோ காட்சிகள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது.

இந்த சம்பவம் 2015ஆம் ஆண்டு நடந்ததாக, கூட்டு ஆதன முகாமைத்துவ அதிகாரசபை தெரிவித்துள்ளது.

எனினும், சமூக ஊடகங்களில் வீடியோ பரவலாக பகிரப்பட்டதால், இந்த சம்பவம் குறித்து வீடமைப்பு மற்றும் சமுர்த்தி அமைச்சு விசாரணையைத் தொடங்கியுள்ளதாக அறிவித்துள்ளது.

இந்த சம்பவத்தில் தொடர்புடைய பெண் ஊழியர் இது தொடர்பாக இதுவரை அதிகாரப்பூர்வ புகார் அளிக்கவில்லை.

கூட்டு ஆதன முகாமைத்துவ அதிகாரசபை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவன் வீடமைப்பு மற்றும் சமுர்த்தி அமைச்சின் கீழ் வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here