தடை தாண்டிய முல்லைத்தீவு மக்கள்: மந்துவில் படுகொலை நினைவஞ்சலி!

மந்துவில் பகுதியில் சிறிலங்கா விமானப்படை விமானங்கள் நடத்திய மிலேச்சத்தனமான தாக்குதலில் கொல்லப்பட்ட 24 உறவுகளின் 21 ஆம் ஆண்டு நினைவு நிகழ்வு இன்றைய தினம் (15) உணர்வுபூர்வமாக அனுஸ்டிக்கப்பட்டது

தாயக உறவுகள் நினைவேந்தல் அமைப்பின் இணைப்பாளர் ச.ரூபனின் ஏற்பாட்டில் இந்த நினைவேந்தல் நிகழ்வு இடம்பெற்றுள்ளது

உயிர் நீத்த உறவுகளுக்காக அகவணக்கம் செலுத்தி மலர்தூவி மலரஞ்சலி செலுத்தி இந்த நிகழ்வுகள் சிறப்பாக இடம்பெற்றது.

இந்த நிகழ்வை நடத்தக் கூடாதென நேற்று ஏற்பாட்டாளர்களிற்கு பொலிசார் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here