திலீபன் நினைவிடத்தில் அதிரடியாக களமிறங்கிய இளைஞர்கள்: பரபரத்த பொலிசார்!

நல்லூரியில் தியாகதீபம் திலீபனின் தூபியை யாரும் நெருங்கவே விடாமல் பெரும் பொலிஸ் அணி குவிக்கப்பட்டுள்ள நிலையில், இளைஞர் அணியொன்று திடீரென அங்கு களமிறங்கியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இலங்கை தமிழ் அரசு கட்சியின் வேலணை பிரதேசசபை உறுப்பினர் நாவலன், தமிழ் அரசு கட்சியின் இளைஞரணி பிரமுகர் குணாளன் உள்ளிட்ட தமிழ் அரசு கட்சியின் இளைஞர்கள் மற்றும் சில இளைஞர்கள் திடீரென அங்கு நுழைந்தனர்.

இதனால் பொலிசார் பரபரப்படைந்த நிலையில், இளைஞர் குழுவினர் திலீபனின் நினைவுதூபியை அண்மித்த பகுதியை சுத்தம் செய்ய ஆரம்பித்தனர்.

இதனால் பரபரப்படைந்த பொலிசார், அந்த இளைஞர்களுடன் பேசி, தூபியை நெருங்க வேண்டாம், அந்த பகுதியில் தாம் சுத்தம் மேற்கொள்வதாக பொலிசார் தெரிவித்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here