மீனவர்களிற்கு ஐஸ் பெட்டிகள் வழங்கிய டக்ளஸ்!

யாழ். மாவட்ட கடற்றொழிலாளர்கள் மீன்களை குறிப்பிட்டளவு நேரத்திற்கு பழுதடையாமல் பாதுகாப்பதற்கு வசதியாக ஐஸ் பெட்டிகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.

கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் வழிகாட்டலின் அடிப்படையில் கடற்றொழில் திணைக்களத்தினால் வழங்கப்பட்ட ஜஸ் பெட்டிகளை வழங்கும் முதற்கட்ட நிகழ்வு நேற்று (14) யாழ். மாவட்ட கடற்றொழில் திணைக்களத்தில் இடம் பெற்றது

கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் கலந்து சுமார் 65 ஐஸ் பெட்டிகளை தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு வழங்கி வைத்தார்.

யாழ். மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த மீனவர் சங்கங்களில் இருந்தும் பயனாளிகள் முதற் கட்டப் பயனாளிகள் தெரிவு செய்யப்பட்ட நிலையில் பெருமளவான கடற்றொழிலாளர்கள் இன்றைய நிகழ்வில் கலந்து கொண்டு தாங்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் மற்றும் எதிர்பார்ப்புக்கள் தொடர்பாக அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு வந்தனர்.

குறித்த விடயங்கள் தொடர்பில் கவனம் செலுத்திய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, கடற்றொழிலாளர்களின் பிரச்சினைகள் தொடர்பாக மாவட்ட உதவிப் பணிப்பாளருடன் கலந்துரையாடி மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் ஆராய்ந்து செயற்படுத்தப்படும் என்று உறுதியளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

ஊடகப் பிரிவு: கடற்றொழில் அமைச்சு

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here