தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் 13வது பட்டமளிப்பு விழா

இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் பதின்மூன்றாவது வருடாந்த பொதுப்பட்டமளிப்பு விழா நாளையும் (16) நாளை மறுதினமும் (17) ஒலுவில் வளாக கேட்போர் கூடத்தில் இடம் பெறவுள்ளதாக பல்கலைக்கழக பதிவாளர் எச்.அப்துல் சத்தார் தெரிவித்தார்.

செப்டம்பர் 16 ஆம் திகதி காலை அமர்வில் பிரயோக விஞ்ஞானபீட மற்றும் பொறியியல்பீட பட்டதாரிகளுக்கான பட்டமளிப்பு நிகழ்வு இடம்பெறும். அன்றைய தினம் பிற்பகல் கலை கலாசாரபீட பட்டதாரிகளுக்கு பட்டமளிக்கப்படவுள்ளது.

இரண்டாம் நாள் அமர்வாக செப்டம்பர் 17 ஆம் திகதி முற்பகல் 9 மணிக்கு இஸ்லாமிய கற்கைகள் மற்றும் அரபு மொழிப்பீடத்திற்கான பட்டமளிப்பு நிகழ்வு இடம் பெறவுள்ளதுடன், பிற்பகல் முகாமைத்துவ வர்த்தகபீட பட்டதாரிகள் பட்டங்களைப் பெறவுள்ளனர்.

இந்நிகழ்வில், மேற்படி ஐந்து பீடங்களினதும் 988 உள்வாரிப்பட்டதாரிகள் பட்டங்களைப் பெறவுள்ளதுடன், 22 பேர் வியாபார நிர்வாக முதுமாணிப் பட்டத்தினையும் 03 பேர் முதுகலைமாணி பட்டத்தினையும் பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்வில், பேராதனைப் பல்கலைக்கழகத்தின் வாழ்நாள் பேராசிரியர் எம்.ஏ. கரீம் மற்றும் அதே பல்கலைக்கழகத்தின் ஓய்வுநிலை சிரேஷ்ட விரிவுரையாளர் எம்.ஐ.எம். அமீன் ஆகியோர் கௌரவ கலாநிதிப் பட்டங்களைப் பெறவுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here