ஆற்றில் குதித்து தற்கொலை செய்த இளம் யுவதியை படம்பிடித்த 15 பேருக்கு அபராதம்!

கண்டி கட்டுகஸ்தோட்டை பாலத்திலிருந்து குதித்து நீரில் மூழ்கிக் கொண்டிருந்த யுதியை காப்பாற்ற முயற்சிக்காமல் படம் பிடித்தார்கள் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் 15 பேருக்கு தலா 2,000 ரூபா அபராதம் விதிக்கப்பட்டது.

கடந்த 11ஆம் திகதி யுவதி பாலத்திலிருந்து ஆற்றில் குதித்து தற்கொலை செய்தார். யுவதி ஆற்றில் குதித்ததும் அந்த பகுதியில் வாகனங்களில் சென்றவர்கள் இறங்கி, யுவதி ஆற்றில் தத்தளித்து நீரில் மூழ்குவதை தமது கையடக்க தொலைபேசிகளில் படம் பிடித்தனர்.

யுவதி மூழ்குவதை சிலர் புகைப்படம் எடுக்க ஆரம்பிக்க, வீதியால் சென்ற அனேக வாகனங்கள் வீதியில் நிறுத்தப்பட்டு, சாரதிகள் இறங்கி புகைப்படம் எடுத்தனர். அவர்கள் வாகனங்களை நிறுத்தியதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

சுமார் 500 பேர் வரையில் பாலத்தில் நின்று,மூழ்கிய யுவதியை கைடக்க தொலைபேசியில் படம் பிடித்தனர்.

போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்தும் விதமாக வாகனங்களை நிறுத்திய குற்றச்சாட்டில் 15 சாரதிகளிற்கு தலா 2,000 ரூபா அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

தமது சமூகப்பொறுப்பை மறந்து நடக்க வேண்டாமென சாரதிகளிற்கு பொலிசார் எச்சரிக்கை விடுத்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here