உயர்நீதிமன்ற நீதிபதிகளாக 12 பேர் நியமனம்!

உயர்நீதிமன்ற நீதிபதிகளாக 12 பேர் இன்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவினால் நியமிக்கப்பட்டனர்.

இன்று (14) காலை ஜனாதிபதி செயலகத்தில் நடந்த நிகழ்வில் புதிய நீதிபதிகளிற்கான நியமன கடிதங்கள் வழங்கி வைக்கப்பட்டது. புதிதாக நியமிக்கப்பட்ட நீதிபதிகளில் கொழும்பு தலைமை நீதிபதி லங்கா ஜெயரத்னவும் அங்குகிறார்.

புதிதாக நியமிக்கப்பட்ட நீதிபதிகள் பின்வருமாறு.

முன்னாள் மாவட்ட நீதிபதிகள் – டபிள்யூ.ஏ.பெரேரா, சி.மீகோடா, ஏ.ஐ.கே.ரணவீர, டபிள்யூ.எம்.எம்.தல்கோடபிட்டி, டி.டபிள்யூ.டபிள்யூ.எம்.ஆர்.சி.பி.குமாரி தெல, எஃப்.எஸ்.பொன்னம்பெருமா.

முன்னாள் நீதவான் – ஆர்.எஸ்.ஏ. திசாநாயக்க மற்றும் டி.ஏ.ஆர். பத்திரன.

முன்னாள் கூடுதல் மாவட்ட நீதிபதி – எஸ்.ஐ.கலிங்கவன்ச.

முன்னாள் தலைமை நீதவான் – கே.எஸ். லங்கா ஜெயரத்ன.
முன்னாள் சிரேஷ்ட அரச சட்டத்தரணி  – என்.டி. விக்ரமசேகர மற்றும் ஏ.ஜி.யு.எஸ்.என். கே.செனவிரத்ன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here