மாமாவை எப்படி கதறக்கதற கொன்றேன் தெரியுமா?: விலாவாரியாக சொன்ன வ.கொரிய ஜனாதிபதி; ட்ரம்ப் பிரமிப்பு!

தான் நினைத்ததை விட, பல விஷயங்களில் வடகொரிய ஜனாதிபதி கிம் கில்லாடியாக இருந்ததாக, டிரம்ப் ஆச்சரியத்துடன் தெரிவித்தார், என ரேஜ் என்ற நூலை எழுதிய பத்திரிகையாளர் பொப் உட்வர்ட் தன் நூலில் குறிப்பிட்டுள்ளார்.

அமெரிக்காவைச் சேர்ந்த பத்திரிகையாளர் பொப் உட்வர்ட், ‘ரேஜ்’ என்ற பெயரில் புத்தகம் எழுதிஉள்ளார். இதில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பை சந்தித்தபோது, அவர் பகிர்ந்து கொண்ட விஷயங்களை தொகுத்து எழுதியுள்ளார்.

புலனாய்வு பத்திரிகையாளரான இவர் ட்ரம்ப் தன்னிடம் கூறியதையெல்லாம் இந்த புத்தகத்தில் எழுத, அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் இது பிரளயத்தை உருவாக்கக் போவதாக நம்பப்படுகிறது.

இந்தப் புத்தகத்தில் தன் மாமாவை எப்படி கொன்றேன் என்பதை வடகொரிய ஜனாதிபதி கிம் தன்னிடம் கூறியதாக ட்ரம்ப் தெரிவித்ததை பொப் உட்வர்ட் எழுதியுள்ளார்.

2018இல் கிழக்காசிய நாடான வட கொரியாவின் ஜனாதிபதி கிம் ஜங் உன்னை, சிங்கப்பூரில், அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் சந்தித்தார். முதல் சந்திப்பின் போதே, கிம் ஜங் பற்றிய சில விஷயங்கள் ட்ரம்பிடம் தாக்கத்தை ஏற்படுத்தி விட்டதாக அவரே தெரிவித்தார்.

தான் நினைத்ததை விட, பல விஷயங்களில் கிம் ஜங் கில்லாடியாக இருந்ததாக ட்ரம்ப் ஆச்சரியத்துடன் தெரிவித்தார். இந்த சந்திப்பின்போது, பல்வேறு முக்கியமான விஷயங்களைப் பற்றி, தன்னிடம் கிம் ஜங் மனம் திறந்து பேசியதாக ட்ரம்ப் குறிப்பிட்டார் என அந்தபுத்தகத்தில் பொப் உட்வர்ட் எழுதியுள்ளார்.

முக்கியமாக, தனக்கு எதிராக செயல்பட்ட மாமாவுக்கு மரண தண்டனை கொடுத்து சுட்டுக் கொன்றது எப்படி என்பதை மிகவும் விளக்கமாக ட்ரம்பிடம், ஜங் தெரிவித்துள்ளார் என்பதை ட்ரம்ப் தன்னிடம் பகிர்ந்து கொண்டதை பொப் உட்வர்ட் தன் நூலில் எழுதி அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here