டிக்டாக்கினால் வினை: நடிகை தற்கொலை!

தெலுங்கு தொலைக்காட்சி நடிகை ஸ்ரவானி கொண்டபல்லி தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

மனசு மமதா, மெளனராகம் போன்ற தொலைக்காட்சித் தொடர்களில் ஸ்ரவானி நடித்துள்ளார். இந்நிலையில் ஹைதராபாத் மதுராநகரில் உள்ள தனது வீட்டின் கழிப்பறையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டுள்ளதாகக் கூறப்படுகிறது. அவருடைய பெற்றோர் அளித்த தகவலின் பேரில் அங்கு வந்த காவல்துறையினர் ஸ்ரவானியின் உடலைப் பிரதேசப் பரிசோதனைக்கு அனுப்பினார்கள். தற்கொலைக்கான காரணம் குறித்து காவல்துறையினர் விசாரணை செய்து வருகிறார்கள்.

டிக்டாக் செயலி மூலம் அறிமுகமான தேவ்ராஜ் என்கிற நபர் தனது சகோதரியிடம் பணம் கேட்டுத் துன்புறுத்தியதாக ஸ்ரவானியின் சகோதரர் ஷிவா பேட்டியளித்துள்ளார். இதையடுத்து ஸ்ரவானியின் பெற்றோர் தேவ்ராஜ் மீது காவல்துறையில் புகார் அளித்துள்ளார்கள். இதையடுத்து தேவ்ராஜ் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருவதாகக் காவல்துறையினர் தெரிவித்துள்ளார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here