வாகனத்திற்குள் 8 திருகோணமலை பெண்கள் செய்த மோசமான செயல்!

திருகோணமலை சீனன் குடா பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பாலம்போட்டாறு பிரதேசத்தில் சீனன் குடா பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் வாகனம் ஒன்றை சோதனை செய்ததில் அதில் சூதாட்டத்தில் ஈடுபட்டிருந்த எட்டு பெண்களை கைது செய்ததாக சீனன் குடா பொலிஸார் தெரிவித்தனர்.

25 முதல் 50 வயதுக்கு இடைப்பட்டவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து 79,650 பணமும் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்டவர்களில் மூதூர், தக்வா நகர் பிரதேசத்தைச் சேர்ந்த இரு பெண்களும், சங்கமம் பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவரும், சிங்கபுர இரண்டாவது ஒழுங்கையைச் சேர்ந்த ஒருவரும், ஆண்டாங் குளத்தைச் சேர்ந்த ஒருவரும், மீனவர் கிராமத்தைச் சேர்ந்த ஒருவரும், கொட்பே பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவரும், ஐந்தாம் கட்டை பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவரும், ரேவதி கிராமத்தைச் சேர்ந்த ஒருவரும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது.

இதில் ஒரு தாய் தனது எட்டு வயது மகளையும் தன்னுடன் வைத்துக்கொண்டு சூதாட்டத்தில் ஈடுபட்டுள்ளமை தெரியவந்துள்ளது.

கைது செய்யப்பட்டவர்களை இன்று (09) திருகோணமலை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சீனன் குடா பொலிஸார் தெரிவித்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here