யாழில் ரெலோ வரவேற்பு விழா!

தமிழ் ஈழ விடுதலை இயக்கம் சார்பாக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் போட்டியிட்டு வெற்றிபெற்ற பாராளுமன்ற உறுப்பினர்களை கௌரவிக்கும் நிகழ்வு இன்றையதினம் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது.

குறித்த நிகழ்வு யாழ்ப்பாணம் நாவலர் கலாசார மண்டபத்தில், தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் யாழ் மாவட்ட கிளையின் ஏற்பாட்டில் இடம்பெற்றது.

கட்சியின் ஸ்தாபகத் தலைவர் குட்டிமணியின் மனைவி உயிரிழந்துள்ள நிலையிலும், இந்த நிகழ்வை ரெலோ நடத்தியது. அவரது உயிரிழப்பினால், இன்று ஏற்பாடு செய்யப்பட்ட பத்திரிகையாளர் சந்திப்பை இரத்து செய்ததாகவும், வரவேற்பு நிகழ்வை நடத்தவுள்ளதாகவும் ரெலோ அறிவித்து இந்த நிகழ்வை நடத்தியது.

இதன்போது ரொலோ கட்சியின் தலைவரும், வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன், வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வினோ நோகராதலிங்கம் மற்றும் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கோவிந்தம் கருணாகரன் ஆகியோர் கௌரவிக்கப்பட்டனர்.

நிகழ்விற்கு தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் முன்னாள் மாகாண சபை உறுப்பினர்கள், உள்ளூராட்சி மன்றங்களின் தவிசாளர் மற்றும் உறுப்பினர்கள், கட்சியின் உறுப்பினர்கள் மற்றும் ஆதரவாளகள் என பலர் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here