யாழில் 1,000 பேருக்கு தடல்புடல் விருந்தளிக்கிறார் சுமந்திரன்!

யாழில் இன்று தனது ஆதரவாளர்களிற்கு எம்.ஏ.சுமந்திரன் தடல்புடலான விருந்தளிக்கிறார்.

கடந்த பொதுத்தேர்தலில் தனக்கு பிரச்சார பணியில் ஈடுபட்டவர்கள் மற்றும் தனது ஆதரவாளர்களிற்கு இந்த விருந்தளிக்கப்படுகிறது.

சிறுப்பிட்டி, எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு அருகில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த நிகழ்வில், யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களை சேர்ந்த ஆதரவாளர்கள் சுமார் 1,000 பேரை ஒன்றுதிரட்டும் முயற்சி மேற்கொள்ளப்படுகிறது.

இதற்காக பேருந்துகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இன்று மாலை 5 மணிக்கு நிகழ்வு ஆரம்பிக்கும். இரவு விருந்து ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதன்போது, எம்.ஏ.சுமந்திரனுக்கு வரவேற்பளிக்கவும், ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தற்போதைய நிலையில் பெரும் எண்ணிக்கையில் ஆதரவாளர்களை திரட்டி, கட்சிக்குள் எதிர்தரப்பிற்கு தமது பலத்தை காண்பிப்பதில் சுமந்திரன் தரப்பு மும்முரமாக உள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here