சகலருக்கும் சத்துணவு வழங்குவதை உறுதிசெய்யவும்!

பொருளாதார மறுமலர்ச்சியினை ஏற்படுத்தல் மற்றும் வறுமையை ஒழித்தல் நிகழ்ச்சி திட்டம், உணவு பாதுகாப்பு தொடர்பாக மாவட்ட அபிவிருத்திக் குழு தலைவரும் பாராளுமன்றக் குழுக்களின் பிரதித்தலைவருமாகிய கௌரவ அங்கஜன் இராமநாதன் அவர்களின் தலைமையில் கலந்துரையாடல் ஒன்று நேற்று (03) மதியம் மாவட்ட செயலகத்தில் அமைந்துள்ள யாழ் மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு சபையின் மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.

இக் கலந்துரையாடலில் யாழ் மாவட்ட மேலதிக அரச அதிபர் திரு.ம.பிரதீபன்,பிரதேச செயலாளர்கள், பிரதேச திட்மிடல் பணிப்பாளர்கள்,விவசாய சம்மேளனங்களின் பிரதிநிதிகள், கடற்றொழில் சம்மேளனங்களின் பிரதிநிதிகள், கால்நடை மற்றும் பண்ணை உரிமையாளர்கள், பொது மக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

இக் கலந்துரையாடலில் விவசாயிகளின் கடற்றொழிலாளர்கள், கால்நடைவளர்ப்போரின் தேவைப்பாடுகள், வயல் மற்றும் மேட்டு நிலப்பிரச்சனைகள் தொடர்பாகவும் யாழ் மாவட்டத்தில் அதிகளவு இலாபாங்களை ஈட்டித்தரக்கூடிய பயிர்களை அந்தந்த காலங்களில் பயிரிடுவது தொர்பாகவும் விவசாய பயிர்செய்கை காலங்களில் கால்நடைகள் கட்டாக்காலிகள் குரங்கள் என்பனவற்றின் சாவல்கள் பற்றியும் கலந்துரையாடப்பட்டது.

இக் கூட்டத்தில் கருத்துரைத்த அங்கஜன் இராமநாதன் தற்சார்பு பொருளாதாரத்தினூடாக வறுமையை ஒழிக்கும் அதே வேளையில், சகல மக்களுக்கும் போதுமான, பாதுகாப்பான மற்றும் சத்தான உணவை அணுகுவதை உறுதி செய்யப்படும் என்றார்.

– ஊடகப்பிரிவு-

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here