உயர் கல்வி மாணவர்களுக்கு உதவி வழங்கும் நேர்முகத் தேர்வு

கிளிநொச்சி கல்வி வளர்ச்சி அறக்கட்டளையின் பிரதான பணிகளில் ஒன்றான உயர் கல்வி கற்கும் மாணவர்களுக்கான உதவி வழங்கும் செயற்றிட்டத்தின் மற்றொரு தொகுதி மாணவர்களுக்கான நேர்முகத் தேர்வு இன்று (01) இடம்பெற்றது.

பல்கலைகழகத்திற்கு தெரிவு செய்யப்பட்டு பொருளாதார நெருக்கடிகள் காரணமாக தங்களின் பல்கலைகழக கல்வியை தொடர்வதில் சிரமங்களை எதிர்கொள்ளும் மாணவர்களுக்கு கல்வி வளர்ச்சி அறக்கட்டளையானது புலம்பெயர் உறவுகள், மற்றும் அமைப்புகளின் நிதிப் பங்களிப்பில் உதவிகளை மேற்கொண்டு வருகின்றது.

அந்த வகையில் 2011 இற்கு பின்னர் இதுவரை கல்வி வளர்ச்சி அறக்கட்டளையிடம் 978 மாணவர்கள் உதவியினை பெற்றுள்ளனர். இதில் 796 மாணவர்கள் தங்களது கல்வியை நிறைவு செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இன்றைய தினம் புதிதாக உதவிபெறும் மாணவர்களை தெரிவு செய்யும் நேர்முகத்தேர்வில் கல்வி வளர்ச்சி அறக்கட்டளையின் தலைவர் யாழ் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் மருத்துவர் த.சத்தியமூர்த்தி, உப தலைவரும் வட்டக்கச்சி ஆரம்ப வித்தியாலய அதிபருமான அ.பங்கையற்செல்வன், அறக்கட்டைளையின் பொருளாளரும் மாகாண கணக்காய்வுத் திணைக்கள உதவிப் பணிப்பாளருமான க. குகதாசன், கால்நடை மருத்துவர் வெ.சகாயமேரி, விரிவுரையாளர் ம.ரஜிதன், ஆங்கில ஆசிரியர் ய.கார்த்தியாயினி ஆகியோர் கலந்துகொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here