ஹெரோயின் விற்ற தம்பதியினர் கைது!

தெஹிவளை ரயில் வீதியில் நேற்று பிற்பகல் (29) மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பொன்றில் ஹெரோயின் வியாபாரத்தில் ஈடுபட்டிருந்த தம்பதியினர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதன்போது சுமார் ஆறு இலட்சம் ரூபாய் பெறுமதியான ஹெரோயின் போதைப்பொருள் அவர்களிடம் இருந்து கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

தெஹிவளை, ஓவன் பிளேஸ் பகுதியை சேர்ந்த தம்பதியினர் ஹெரோயின் வியாபாரத்தில் ஈடுபடுவதாக தெஹிவளை பொலிஸ் அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்துள்ளது.

அதன்படி, தெஹிவளை ரயில் வீதியில் நேற்று பிற்பகல் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது முச்சக்கரவண்டியில் ஹெரோயின் வியாபாரத்தில் ஈடுபட்டிருந்த குறித்த தம்பதியினர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதன்போது, அவர்களிடம் இருந்து சுமார் 40 கிராம் ஹெரோயின் போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டுள்ள நிலையில், அவற்றின் பெறுமதி சுமார் 6 இலட்சம் ரூபாய்க்கும் அதிகம் என தெரிவிக்கப்படுகிறது.

கைது செய்யப்பட்ட தம்பதியினர் தெஹிவளை நீதவான் முன்னிலையில் இன்று (30) முற்படுத்தப்படவுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here