தனிமைப்படுத்தல் மையத்திலிருந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட அவுஸ்திரேலிய பெண் தப்பியோட்டம்!

அளுத்கம சுற்றுலா ஹோட்டலில் தனிமைப்படுத்தப்பட்ட பின்னர் நாகொட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பெண்ணொருவர் நேற்று காலை வைத்தியசாலையில் இருந்து தப்பியோடியுள்ளார்.

அளுத்கம,  மொரகல்லாவில் உள்ள ஹோட்டல் ஈடனில் தனிமைப்படுத்தப்பட்ட அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த 80 வயதுடைய பெண்ணே தப்பியோடியுள்ளார்.

மனநோய்க்கான அறிகுறிகளைக் காட்டியதால் அந்த பெண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார், நேற்று காலை 7.30 மணியளவில் தாதியொருவர் மருந்துகளை வழங்குவதற்காக அவரை பார்வையிட்டபோது அவர்தப்பியோடியது தெரிய வந்தது.

அவரது மாதிரி பிசிஆர் பிரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளது. அவருக்கு கொரோனா தொற்று இருக்கிறதா இல்லையா என்பது இன்னும் தெரியவரவில்லையென வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here