வாக்கெண்ணும் மையத்திற்கு சென்ற சுமந்திரனுக்கு எதிர்ப்பு: அதிரடிப்படை தாக்குதல்; மாவையின் மகன் மீதும் தாக்குதல்!

யாழ் வாக்கெண்ணும் மையத்திற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் சென்றதையடுத்து, அங்கு பெரும் களேபரம் ஏற்பட்டது. இதைதொடர்ந்து வாக்கெண்ணும் மையம் கலவர பூமியானது.

யாழ்ப்பாண மாவட்ட வேட்பாளர் எம்.ஏ.சுமந்திரன் சற்று முன்னர் வாக்கெண்ணும் மையத்திற்கு சென்றார்.

இதன்போது, அங்கு குவிந்திருந்த பலரும் அவருக்கு எதிராக குரல் எழுப்பினர். இலங்கை தமிழ் அரசு கட்சியின் இளைஞர் அணியினரும் அவருக்கு எதிராக குரல் எழுப்பினர். தமிழ் தேசிய கூட்டமைப்பு, தமிழ் மக்கள் தேசிய முன்னணி உள்ளிட்ட பல்வெறு கட்சிகளின் உறுப்பினர்கள் எதிர்த்து குரல் எழுப்பினர்.

கோட்டாபய ராஜபக்சவின் விசேட உத்தரவில் அண்மையில் எம்.ஏ.சுமந்திரனுக்கு மேலதிக விசேட அதிரடிப்படை பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்தது. பெரும் படைப்பாதுகாப்புடனேயே சுமந்திரன் அங்கு சென்றார்.

கூட்டத்தின்பெரும் எதிர்ப்பிலிருந்து சுமந்திரனை பாதுகாத்து அதிரடிப்படை பெரும் அரண் அமைத்தது. அத்துடன், கூட்டத்தினரை கலைந்து செல்ல பணித்தனர். எனினும், இளைஞர்கள் அங்குகுழுமியிருந்தனர்.

இதையடுத்து நிலைமை கட்டுமீறி செல்ல, இளைஞர்கள் மீது சுமந்திரனின் பாதுகாப்பு அதிரடிப்படையினர் கொடூர தாக்குதல் நடத்தினர். இதன்போது, தமிழ் அரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசாவின் மகன் கலையமுதனையும் அதிரடிப்படையினர் பிடித்து கொடூரமாக தாக்கினர்.

தாக்குதல் நடத்தி நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்ததை தொடர்ந்து சுமந்திரனை பாதுகாப்பாக அங்கிருந்த வெளியேற்றினர். எனினும், இளைஞர்கள் பின்தொடர்ந்து சென்று துரோகி என குரல் எழுப்பினர்.

எனினும், இளைஞர்கள் நெருங்காமல் சுமந்திரனின் விசேட அதிரடிப்படையினர் துப்பாக்கி முனையில் அரண் அமைத்திருந்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here