கோர விபத்து: உயிர்ப்பலி வாங்கிய டிப்பர்!

வவுனியா பறண்நட்டகல் பகுதியில் இன்றையதினம் காலை இடம்பெற்ற விபத்தில் ஒருவர் மரணமடைந்துள்ளார்.

வவுனியாவிலிருந்து ஓமந்தை நோக்கி சென்று கொண்டிருந்த மோட்டார்சைக்கிளும், ஓமந்தையில் இருந்து வவுனியா நோக்கி சென்று கொண்டிருந்த டிப்பர் வாகனமும் மோதியதில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தில் மோட்டார்சைக்கிளில் பயணித்த தங்கராஜா பால்ராஜ் (60) படுகாயமடைந்த நிலையில் நோயாளர்காவு வண்டி மூலம் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். எனினும் சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளார்.

இதேவேளை குறித்த விபத்தினால் கட்டுப்பாட்டை இழந்த டிப்பர் வாகனம் குடைசாய்ந்துள்ளதுடன் அதன் சாரதி சிறுகாயங்களிற்கு உள்ளாகினார்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணையினை ஓமந்தை பொலிசாரினால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here